Monday, November 9, 2009

அள்ளிக் கொடுக்கும் பெருமாள்

அரக்கன் ராஜபக்சே
அவன் இங்கு வந்திருக்கிறான்
தர்மம் அழிந்து
அதர்மம் தோன்றும் போதெல்லாம்
அவதாரம் எடுப்பதாகக் கூறியவர்
எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்து
காத்திருந்திருக்கிறார்...
சன்னதியில் வந்து நின்றிருக்கிறான் அவன்
இன்று போய் நாளை வா என்று கூட தட்ட முடியாமல்
சிறப்பு தரிசனம் தந்திருக்கிறார் இவர்
பல கோடி மதிப்புள்ள பெருமாளின் நகைகளோடு
அவனது கணக்கும் சேர்ந்திருக்கலாம்
நாள் நெடுக
கால் வலிக்க
கன்னத்தில் போட்டபடி
பெருமாளை தரிசிக்க
பொதுவழியில் நம்மக்கள் இன்னமும் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

கோவிந்தா! கோவிந்தா!! கோவிந்தா!!!

No comments: