Sunday, November 21, 2010

உலகின் எல்லா மொழிகளிலும் பிடித்த வார்த்தை





உலகின் எல்லா மொழிகளிலும் பிடித்த வார்த்தை... புரட்சி


நான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்.
- சே குவேரா


உங்கள் குருதியைக் கொடுங்கள்; சுதந்திரம் வாங்கித் தருகிறேன்.
கேட்டுப் பெறுவதல்ல விடுதலை; எடுத்துக் கொள்வது.
- நேதாஜி


விடுதலை என்பது எதிரி நமக்குக் கொடுப்பது அன்று. ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்து நாமே போராடிப் பெற வேண்டிய புனிதமான உரிமை
- பிரபாகரன்


இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி.
- ஃபிடல் காஸ்ட்ரோ


உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை - அடிமைத்தளையைத் தவிர. ஆனால் வெல்வதற்கு உலகமே இருக்கிறது
- காரல் மார்க்ஸ்

ஓடாத மானும், போராடாத மனித இனமும் வென்றதாக வரலாறு இல்லை
- பெரியார்


ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
- அம்பேத்கர்


செய் அல்லது செத்து மடி.
- காந்தி


உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு.
- காசி ஆனந்தன்


புரட்சியாளனைச் சிறைப்பிடிக்கலாம். புரட்சியைச் சிறைப்பிடிக்க முடியாது.
- ஹுவே நியூட்டன்


புரட்சி என்பது ஆபத்தையும் மரணத்தையும் அழிக்கும் விஷயம் அல்ல; அவை இரண்டையும் மதிப்புள்ள ஆக்குவதே புரட்சி.
- ஹெச்.ஜி.வெல்ஸ்


எந்த ஒரு முக்கியச் சமூக மாற்றமும் புரட்சி இல்லாமல் ஏற்படுவதில்லை. புரட்சி என்பது சிந்தனையைச் செயலாக்குவது.
- எம்மா கோல்ட்மேன்


பயங்கரவாதி என்கிறான் துப்பாக்கி வைத்திருப்பவனை அணுகுண்டு வைத்திருப்பவன். அடுத்தவன் அழுததற்கு செத்துப் போனவன் ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி இதுதான் புரட்சியாளர்களுக்கு இன்று கிடைக்கும் பரிசு என்பதால் பாரதியை, பாரதிதாசனை படித்தும் அடிமையாகவே இருக்கிறேன்...

Sunday, October 31, 2010

முள்ளி வாய்க்கால் நிகழ்வு

சென்ற வாரம் விகடனில் விக்கிரமாதித்தன் இதை எழுதியுள்ளார். ஏனோ என் உணர்வுகளும் இப்படித்தான் உள்ளது. என்னுடைய இதே உணர்வுக்கு மேலும் வேறு காரணமும் உண்டு.


நீங்கள் எப்படியோ தெரியாது
நான்
சாதாரணன்
பார்க்கப்போனால்
ரொம்ப சாதாரணன்

படித்துக்கொண்டிருந்த காலத்தில்
இப்படி உணர்ந்ததில்லை
புத்திசாலி மாணவனாக இருந்ததனால்

பத்திரிகையாளனாக வேலை பார்த்த சமயத்தில்
கெத்தாகத்தான் திரிந்திருக்கிறேன்
அது ஏற்படுத்தியிருந்த மதிப்பில்

ஆண் குழந்தையென்று கேட்டதும்
அரசனைப்போலக் கருதிக்கொண்டேன்
அந்த க்ஷணத்தில்

கவிஞனென்றானதும்
கம்பீரமும் கர்வமும் சேர்ந்துகொண்டது
அதெல்லாம் தனி அழகு

அத்தனையும்
போன வருஷம் வரைதான்
இன்றைய தினம்
சாமான்யன்

இப்போதெல்லாம்
நீங்கள் சிகரெட் வாங்கிக்கொண்டு
வரச் சொன்னால் தட்ட மாட்டேன்
'
பாட்டில்' வாங்கி வர ஏவினால்
கௌரவம் பார்க்க மாட்டேன்
பெண்ணே கேட்டாலும்
முடிந்த வரையிலும் முயற்சிப்பேன்
சுயமரியாதை தன்மானம் என்று
நினைக்க மாட்டேன்

முள்ளி வாய்க்கால் நிகழ்வு அப்படி
மாற்றிப்போட்டிருக்கிறது என்னை
இருக்காதா பின்னே
படங்களுடன் செய்திகளைப்
பார்த்ததில் எப்படி
பைத்தியம் பிடிக்காமல்போயிற்று
ஏன் தூக்க மாத்திரை போட்டு
தற்கொலை செய்துகொள்ளவில்லை

டாஸ்மாக்தான்
காப்பாற்றிவைத்திருக்கிறது உண்மையிலேயே
நேரம் காலம் இல்லாமல்
குடித்துக்கொண்டேயிருந்தேன்
தெருவில் விழுந்துகிடந்தேன்

போதை வெறிச்சியில்
பாரதிதாசன் கவிதைகளைக்
கொளுத்தத் தோன்றியது
(இனவுணர்வும் மொழியுணர்வும்
என்ன இழவுக்கு)
திராவிட இயக்கத் தலைவர்கள் சிலைகளை
தூள்தூளாக உடைத்தெறியத் தோன்றியது
(இத்தனை சீரழிவுக்கும்
யார் காரணம்)
மேலும் ஒரு குவாட்டர் அடித்துவிட்டு
புலம்பிக்கொண்டிருப்பேன்

நாடகம்
முடிந்தது
திரைச்சீலையையும்
தொங்கவிட்டுவிட்டார்கள்

இங்கே
நானும் ரொம்ப ரொம்ப சராசரிதான்!



நன்றி விகடன்

Thursday, December 10, 2009

கடவுள் நம்பிக்கை

என்னவோ கடவுள்னு ஒருவர் இருந்தால், அவர் ஆத்தீகர்களுக்குத்தான் நன்றியோட இருப்பார்னு நினைப்பது தவறு! கடவுள் என்பவர் இருந்தால், சாதாரண ஜால்ராவுக்கும், முகஸ்துதிக்கும் மயங்கும் மனிதனைப்போல் உணர்வு உள்ளவர்/ள் போல் நினைத்து மடமையில் வாழ்கிறார்கள் சில ஆத்தீகர்கள்!நாத்தீகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரி அல்ல. கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. அவர்களுக்கு கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்தீகர்களைப் பொறுத்தமட்டில் கடவுள் கடவுள்னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்தீகர்களைத்தான் அவர்களுக்கு பிடிக்காது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்தீகர்களுக்கு எதிரி அல்ல.இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணனும், நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர் கோவிச்சுக்குவாரா? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?கடவுளுக்கு நாத்தீர்ககளைத்தான் ரொம்ப பிடிக்கும், பிடிக்கனும். தான் இல்லாமலே இவர்களால் தன்னம்பிக்கையுடன் போராடி வாழமுடியுது என்பதை கடவுளே பாராட்டுவார். என் பேரைச்சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றாமல்/ தங்களையே ஏமாற்றாமலும் இருக்காங்கனு ரொம்ப சந்தோஷப்படுவார்! அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் எனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல்போகிறது!பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பது, மனிதாபிமானத் தோட வாழ்வது போன்ற நற்பண்புடன் வாழ்ந்தால், நாத்தீகராக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்பதை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்தீகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.நாத்தீகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! அவர்களுக்கு நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்தீகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் அவர்களை குறைக்காது என்பதை ஆத்தீகர்கள் உணர்வது நல்லது!