தந்தை பெரியார் வரலாறு - 2ன் தொடர்ச்சி...
எல்லாக் காலத்திலும் இழப்புகள்தான் ஞானத்தின் பிறப்பிடம். எதுபற்றியும் கவலைப்படாமல் சலங்கை பூட்டிய காளை போல் உல்லாசமாய் குதித்தோடிக்கொண்டிருந்த ராமசாமியின் வாழ்வில், பிறந்து ஐந்தே மாதத்தில் இறந்துபோன அவரது பெண் குழந்தையின் இழப்பு சொல்ல முடியாத துக்கமாக அவரது தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டது. கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி போன்ற குணங்கள் சட்டென அவரை விட்டு விலகி நின்றன. சோகம் அவரைச் சூழ்ந்து கொண்டது. துக்கம் அவரது தூக்கத்தைப் பறித்தது. பின்னாளில் தந்தை இறந்தபோதும், தாய் இறந்தபோதும் தன் இணைநிழலாக வாழ்ந்த மனைவி நாகம்மை இறந்த போதும், அதுகுறித்துக் கடுகளவும் சோர்ந்துபோகாமல் அடுத்த நிமிடமே இடுப்பில் வேட்டியை இறுக்கிக்கொண்டு தொண்டு செய்யப் புயலெனப் புறப்பட்டுச் சென்ற அதே ராமசாமிதான், தன் இளம் வயதில் எதிர்கொண்ட முதல் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனையில் துவண்டார்.
காலங்கள் நகர்ந்தன. வழக்கம் போலக் காலையும் மாலையும் மண்டிக்கும் வீட்டுக்குமாக கால்கள் தூரத்தை அளந்துகொண்டு இருந்தாலும், மனம் என்னவோ சோகத்தில் தோய்ந்திருந்தது. மகனது இந்த மனநிலையை வெங்கட்ட நாயக்கரால் சரியானபடி புரிந்துகொள்ள முடியவில்லை. ராமசாமி முன்பு போல வேலையில் அத்தனைச் சுறுசுறுப்பாக இல்லாதது கண்டு அவருக்கு அடிக்கடி கோபம் தலைக்கேறியது. பலர் முன்னிலையில் மகனைத் திட்டினார். கல்யாணமான 25 வயது வாலிபன் என்றுகூடப் பாராமல், வெற்றிலைச் சாற்றை ராமசாமியின் முகத்தில் துப்பி அவமானப்படுத்தினார். ''தறுதலை... தறுதலை..! உன்னால எனக்கு என்ன புண்ணியம்!'' என்றுஆத்தி ரத்தோடு தன் செருப்பைக்கழற்றிப் பலர் முன்னிலையில் மகன் மீது வீசும் அளவுக்கு வெங்கட்ட நாயக்கரின் கோபம் கட்டுக் கடங்காத நிலைக்குச் சென் றது. ஏற்கெனவே குழந்தை இறந்த சோகத்தில் தடு மாறிக்கொண்டு இருந்த ராமசாமிக்குத் தந்தையால் ஏற்பட்டு வந்த இந்தத் தொடர் அவமானங்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீடு வெறுத்தது; வாழ்க்கையும் வெறுத்தது. எங்காவது கண்காணாத தேசத்துக்குப் போய் பிச்சை எடுத்தாவது வாழலாமே தவிர, இனி இந்த வெங்கட்ட நாயக்கரின் முகத்தில் விழிக்கவே கூடாது என முடிவெடுத்தார் ராமசாமி.
நாயக்கரின் வீடு அன்றைய இரவுப்பொழுதில், மறுநாளின் களேபரத்தை முன் கூட்டி அறிந்துவைத்திருந்தது போல அமைதியாக உறங்கிக்கிடந்தது. மறுநாள் காலையில் நாகம்மை அழுதுகொண்டே மாமியாரை எழுப்பி, தன் கணவனைக் காணாத விவ ரத்தைச் சொல்ல, அடுத்த நொடி நாயக்கர் வீடே அல்லோல கல்லோலப்பட்டது. வேலைக்காரார்கள் கூச்சலும் குழப்பமுமாக ஆளுக்கொரு திசையில் ஓடினர். வெங்கட்ட நாயக்கர் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்தார். அதே நேரம், வடக்கு நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றின் ஒரு கூபேயில், பயணிகள் தங்களுடன் பயணிக்கும் ஒரு சாமியாரை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். இத்தனை சின்ன வயதில் சாமியார் கோலமா? இதுதான் அவர்களின் ஆச்சர்யப் பார்வைக்குக் காரணம். அந்தப் பயணி களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இந்தச் சாமியார்தான் பின்னாளில் சாமியார் களையும் அவர்களது போலி கூடாரங்களையும் விரட்டியடிக்கும் பெரும் புரட்சியாளராகவும் தமிழ்நாட்டின் விடிவெள்ளியாகவும் மாறப் போகிறார் என்று!
காசி. எங்கு பார்த்தாலும் மடங்கள், கோபுரங்கள், மணியோசைகள், வேத உச்சாடனங்கள் என 24 மணி நேரமும் பக்தி பூசிய நகரம். தங்களது பாவங்களைப் போக்க, இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் வந்து குவியும் பக்தர்களும், அந்த அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் போலிச் சாமியார்களுமாக நிறைந்து வழியும் நகரம். கொலை, கொள்ளை செய்யும் கொடூர மனம் படைத்தவர்களும், நர மாமிச பட்சிணிகளும் கூட அங்கே மலிந்திருந்தனர். மதமும் மனிதர்களும் ஒரு சேரக் கைகோத்து சீரழித்துக்கொண்டிருந்த அந்த நகரின் வீதிகளில் சாமியார் கோலத்தில் வந்திறங்கினார் ராமசாமி. அங்கே அவருடன் இரண்டு பிராமண நண்பர்களும் வந்திறங்கினர்.
வழியில், பெஜவாடாவில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டபோது, அவர்கள் ராமசாமிக்குப் பழக்கமாகியிருந்தனர். பெஜவாடாவில் முருகேச முதலியார் என்பவர் அப்போது இவர்கள் மூவருக்கும் அடைக்கலம் தந்து உதவியிருந்தார். இப்படி மற்றவர் நிழலில் அண்டிப் பிழைப்பதைவிட, காசிக்குச் சென்றால் காலாட்டிக்கொண்டே மடங்களில் பிழைப்பு நடத்தலாம் என பிராமண நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் ராமசாமி அவர்களுடன் புறப்பட்டுக் காசிக்கு வந்திறங்கினார். ஆனால், காசியிலோ கதை வேறு மாதிரியாகத் திரும்பியது. நல்ல பசி நேரம்! ராமசாமி ஏக எதிர்பார்ப்போடு உற்சாகமாக நண்பர்களுடன் வேகமாக மடத்தினுள் நுழைந்தார். ஆனால், மடம் அவரை மட்டும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஒரு கை அவரை வலுக்கட்டாயமாக வெளியே பிடித்துத் தள்ளியது. ''நீ பிராமணன் இல்லை. அதனால் உன்னை அனுமதிக்க முடியாது'' என்று மடத்து நிர்வாகிகள் திட்டவட்டமாகக் கூறினர். அப்போதுதான் ராமசாமி உணர்ந்தார், தன்னைப் பிடித்து வெளியே தள்ளிய கை மனிதனுடையது அல்ல; மதத்தினுடையது என்று! இத்தனைக்கும் அது ஒரு செட்டியாரின் மடம். பிராமணர்கள் சாப்பிட்டால் மட்டும்தான் தனக்குப் புண்ணியம் என்பது அந்தச் செட்டியாரின் மூட நம்பிக்கை. ராமசாமிக்கோ வயிற்றில் பசித் தீ! கண்களிலோ நீர். ஆத்திரமும் ஆவேசமும் உள்ளுக்குள் புரண் டது. அதைவிட பசி அவரை அதிகமாகப் புரட்டி எடுத்துக்கொண்டு இருந்தது. வேறு வழியில்லை. திரும்பிப் பார்த்தார். மடத்து வாசலில் குவியலாக எச்சில் இலைகள். இனி, மான அவமானம் பற்றி யோசிக்க அவகாசம் இல்லை என முடிவு செய்தார். ஆம்... இன்று எத்தனையோ தமிழர்கள் வயிறார உண்பதற்குக் காரணமான பெரியார் எனப்படும் ஈ.வெ.ராமசாமி, அன்று எச்சில் இலைகளின் முன் கண்ணீரோடு அமர்ந்தார். 'மனிதனை மனிதன் ஏன் வெறுக்க வேண்டும்? எது அவர்களிடத்தில் வெறுப்பை ஏற்படுத்துகிறது?' என உள்ளுக்குள் ஓராயிரம் கேள்விகள் பிறந்தன. அன்று அவருடைய வயிறு நிறைந்தது. ஆனால், மனம் பள்ளத்தாக்காக வெறுமையில் உழன்றது.
காசியில் இனி பிழைப்பு ஓட வேண்டுமானால் பிராமணனாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டார் ராமசாமி. மொட்டை அடித்துக்கொண்டார். தாடி, மீசையை மழித்துக்கொண்டார். நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்தார். ஏற்கெனவே செக்கச் சிவந்த மேனி. கேட்கவா வேண்டும்..! பூணூல் அணிந்ததும் அசல் பிராமணனாகவே மாறிவிட்டார் ராமசாமி. வழியில் தென்பட்ட ஆசாமிகளெல்லாம் சாமி எனக் கையெடுத்துக் கும்பிட்டனர். கச்சிதமான வேஷத்துக் கேற்ப ஒரு சைவ மடத்தில் வேலையும் கிடைத்தது. கருக்கலிலேயே எழுந்து குளித்து முடித்து பூ பறிக்கும் வேலை. பூ பறிப்பது சுலபமான வேலைதான்; ஆனால், விடிகாலையிலேயே குளித்தாக வேண்டுமே, அதுதான் பிரச்னை! ஒரு நாள் நம்மவர் கங்கைக் கரையில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் தலைக்குத் தண்ணீர் தெளித்துக்கொண்டு, குளித்ததாகப் பேர்பண்ணிவிட்டுக் கிளம்பியபோது கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். அவர் பிராமணர் இல்லை எனத் தெரிய வர, அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். தொடர்ந்து பசியும் பட்டினியுமாகக் காசி வீதிகளில் தெருத்தெருவாக அலைந்தார். பிச்சை எடுத்தார். முன்னோர் கடன் கழிப்பதற்காக கங்கைக் கரையில் பிண்டம் வைக்கப்பட்ட உணவை எடுத்து உண்டார்.
'சாதாரண மனிதர்களுக்கு இங்கே மரியாதை இல்லை; வஞ்சகர்களும், பித்தலாட்டக்காரர்களும், காம வியாபாரிகளும், போதைப்பொருள் கடத்து பவர்களும் மட்டுமே இங்கு குப்பை கொட்ட முடியும்' என் பதை உணர்ந்தார் ராமசாமி. ஒருகட்டத்தில் காசியை விட்டுப் புறப்பட்டு ஆந்திரா வந்து, ஒரு நண்பரின் வீட்டில் தங்கினார். வீட்டு நினைவு ஒருபுறம், மனைவி நாகம்மையின் நினைவு ஒருபுறம் என மனதை அலைக்கழிக்க, தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்த ஓர் இரவில், வாசல்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. வீட்டுக்காரரானசுப்பிரமணிய பிள்ளை எழுந்துபோய்க் கதவைத் திறந்தார். வந்தவரின் குரல் ராமசாமியின் காதுகளில் விழுந்து, முதுகுத்தண்டை சில்லிட வைத்தது. சட்டென எழுந்து கதவருகே சென்றார் ராமசாமி. வாசலில் நின்றுகொண்டு இருந்தவர் அப்பா வெங்கட்ட நாயக்கர். சட்டென அவருக்குத் தன் மகனை அடையாளம் தெரியாவிட்டாலும், அடுத்த நொடியே சுதாரித்துப் புரிந்துகொண்டு, ''ராமா, என்னை மன்னிச்சுடுடா! இனிமே உன்னைத் திட்ட மாட்டேன்டா!'' எனக் கதறியபடி தன் மகனை ஆவேசமாக இழுத்து அணைத்துக் கொண்டு குலுங்கினார் வெங்கட்ட நாயக்கர்.

சந்தடிகள் மெள்ள ஓய்ந்துகொண்டு இருந்த ஈரோடு நகர சந்தையின் இரவு நேரம். கடைகள் ஒவ்வொன்றாக அடைக்கப்பட, கணக்குப் பிள்ளைகளுடன் வியாபாரிகள் வெளியேற, சாவிக்கொத்துடன் வெளியே வந்தார் வெங்கட்ட நாயக்கர். மனசு முழுக்கக் கலக்கம். 'சே... எப்பேர்ப்பட்ட அவமானம்! மண்டி நாயக்கர் மகன் கடன் வாங்குவதா?' விஷயம் வேறொன்றுமில்லை. சித்த வைத்தியம் படித்துக்கொண்டு இருந்த அவரது மூத்த மகன் கிருஷ்ணசாமி யாரிடமோ ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதைத் திருப்பித் தரவில்லையாம். கடன் கொடுத்தவர்கள் நாயக்கரிடம் புகார் கொடுத்துவிட்டர்கள். இதுதான் அவரது உளைச்சலுக்குக் காரணம். ஆனால், அதேசமயம் இளைய மகன் ராமசாமியை நினைத்தபோது, அவருக்கு ஆச்சர் யம்! என்ன சிக்கனம்! என்ன சாமர்த்தியம்! காசியில் சோறு தண்ணி இல்லாமல் தெருவில் பிச்சை எடுத்துச் சாப்பிட்ட போதுகூட, ராமசாமி கையோடு எடுத்துச் சென்ற நகை நட்டில் ஒரு குண்டுமணிகூட விற்கவில்லை. அவனது புத்தி சாதுர்யத்தை நினைத்துப் பார்த்தால், அவருக்கு ஒருபக்கம் சிரிப்பாகவும், இன்னொரு பக்கம்சந்தோஷமாகவும் இருந்தது. அதனால்தான் ராமசாமியை திரும்ப ஈரோடுக்கு அழைத்து வந்தபோது, அவன் துணி மூட்டையில் பொத்திவைத்திருந்த அத்தனை நகைகளையும் பேருந்து நிலையத்தில் வைத்தே உடம்பு முழுக்கப் போட்டுக்கொள்ளச் செய்து, 'பார், என் மகனை! ஓடிப்போனாலும் ஊதாரித்தனமாக இல்லாமல் போட்ட நகைகளுடன் திரும்ப வந்திருக்கிறான்!' என ஊருக்குச் சொல்லும்விதமாக வீதியில் பெருமையுடன் நடத்திக் கூட்டி வந்தார். 'ஒரு மகன் சிக்கனத்தின் சிகர மாக இருக்க, இன்னொருவனோ ஊரில் கடன் வாங்கித் தன் மானத்தை வாங்கிவிட்டானே... நாளைக்கு அவனுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!' என யோசித்தபடியே கால்களை வீசி நடை போட்டார்.
மறுநாள், வீட்டில் வெங்கட்ட நாயக்கர் நாற்காலியில் வீற்றிருக்க, அவரைச் சுற்றிப் பெரும் கூட்டம். ஒருபுறம் மூத்த மகன் கிருஷ்ணசாமி வெட்கத்துடன் தலை குனிந்து நின்றிருக்க, வேலைக்காரர்கள் ஒற்றை ரூபாய் நாணயங்களை வரிசையாக நீளமாக அடுக்குவதில் மும்முரமாக இருந்தனர். கிருஷ்ண சாமிக்குக் கடன் கொடுத்த நபர், இந்தக் காட்சியை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.நாணயங்கள் முழுவதுமாக அடுக்கி முடிக்கப்பட்டபோது, அந்த வரிசை கூடத்தைத் தாண்டி, வாசலைத் தாண்டி, தெரு வரை நீண்டிருந்தது.
வெங்கட்ட நாயக்கர் கிருஷ்ண சாமியை அழைத்து, ''மகனே... நீ கடன் வாங்கிச் செலவழித்த தொகை எத்தனை பெரியது என் பதை உணர்த்தத்தான் இப்படி வரிசையாக அடுக்கச் சொன்னேன். இனியாவது, பணத்தின் அருமையை உணர்ந்துகொள்!'' என அறிவுறுத்தினார். பின்பு,கடன் கொடுத்தவரிடம் அந்த நாணயங்களை மொத்தமாக அள்ளிச் செல்லும்படி உத்தரவிட்டார். அன்று முழுக்க அவருக்கு நிம்மதி இல்லை. இனியும் இந்தக் கதை தொடர்ந் தால், மண்டி நாயக்கர் மற்றவர் களிடம் மண்டியிட வேண்டி வந்துவிடுமோ எனும் கவலை அவரைப் பீடித்திருந்தது.
அன்று இரவே அதிரடியாக ஒரு முடிவு எடுத்தார் நாயக்கர். மைனர் மகாதேவனாக வலம்வந்து கொண்டு இருந்த ராமசாமியை ஈரோட்டின் மதிப்பு மிக்க மனித னாக மாற்றிய முடிவு அது.
தன் வியாபாரம், தனது வெளிவட்டாரப் பழக்கவழக்கம், வகித்துவந்த ஊர்ப் பதவிகள் அனைத்துக்கும் ராமசாமிதான் வாரிசு என சம்பந்தப்பட்ட ஆட்களிடம் தெரிவித்தார் நாயக்கர். தந்தை தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து ராமசாமிக்குப் பெரும் வியப்பு. கூடவே உள்ளத் தில் உறுதியும் பொறுப்பு உணர்வும் சேர்ந்துகொண்டன.
''மகனே, துட்டுதான் வாழ்க்கை. கையில் காலணா காசு இல்லைன்னா, ஒரு பய உன்னை மதிக்க மாட்டான். அதே போல, உன்னை நம்பி யாராவது பொறுப்பு கொடுத்தால், அதை உயிரைக் கொடுத்தாவது செய்து முடி. மத்தபடி எல்லாம் உன் இஷ்டம்!''
அந்த வார்த்தைகள் ராம சாமியின் இதயத்தில் கல்வெட்டுகளாகப் பதிந்தன.
அடுத்த நாளே, ஈரோடு பலசரக்குச் சந்தையில் பரபரப்பு! அதுவரை வெங்கட்ட நாயக்கர் மண்டி என இருந்த பெயர்ப் பலகை, 'ராமசாமி நாயக்கர் மண்டி'யாக மாறியது. கூடவே ராமசாமியின் வேஷமும் மாறியது. கணக்குப்பிள்ளை, பட்டாமணியக்காரர், ரெவின்யூ இன்ஸ்பெக்டர், டாக்டர், வக்கீல், டெபுடி கலெக்டர், முன்சீப்,மாஜிஸ்திரேட் போன்ற பதவியாளர்கள் இப்போது ராமசாமிக்கு வணக்கம் போட ஆரம்பித்தனர். வெள்ளைக்கார அதிகாரிகளின் பழக்கமும் ஏற்பட்டது. அவர்களைப் பார்க்க போகும்போதெல்லாம் வெங்கட்ட நாயக்கர் தன் மேல் சட்டையைக் கழற்றிச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால், ராமசாமிக்கு அது எதுவும் பிடிக் காதே! ஒருமுறை வெங்கட்ட நாயக்கரே பதற்றத்துடன் வெள்ளை அதிகாரிகள் முன்பு ராமசாமியின் சட்டையைக் கழற்றும்படிசொல்ல, ''நீ வண்டி நாயக்கர் மகனாப் பிறந்ததால், இவனுங்களுக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடலாம். நான் ஈரோடு மண்டி நாயக்கர் மகன். எவனுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை!'' என அழுத்தமாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராமசாமி.
1911-ல் ஒரு நாள், வெங்கட்ட நாயக்கர் தனது உலக வாழ்க்கை யைத் துறந்தபோது, ஈரோட்டின் சகல காரியங்களையும் தீர்மானிக் கும் மகத்தான சக்தியாக மாறி யிருந்தார் ராமசாமி.
மக்களிடத்திலும் அதிகாரிகளிடத்திலும் அவரது மதிப்பும் செல்வாக்கும் பன்மடங்கு உயர்ந்திருந்தது. அவரது சிக்கன குணமும் நேர்மையும் வியாபாரத்தில் அவரைச் சிகரத்துக்கு இட்டுச் சென்றன. பிளேக் நோய் வந்து ஈரோடு நகரமே மரண பயத்தில் திணறியபோது, பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தமது தோளில் சுமந்து மருத்துவமனைகளுக்கு அவர் ஓடிய காட்சி, மக்கள் மனங் களில் ராமசாமியை ஒப்பற்ற நாயகனாக மாற்றியது.
''முதல்ல நாயக்கர் வரட்டும், அதுக்கப்புறம்தான் எல்லாம்!'' என நகரத்தில் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் ராமசாமியை எதிர்பார்த்தனர். கோர்ட் வழக்கு களிலும் தீர்ப்பு சொல்வதற்கு முன், 'எதுக்கும் ராமசாமிகிட்ட ஒரு தடவை கேட்டுட்டுத் தீர்ப்பு சொல்வோம்' என மாஜிஸ்திரேட் டுகளே மண்டிக்கு ஆள் அனுப்பிய அதிசயமும் நடந்தது.
ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டிக்கு ராமசாமி தலைவரான போது, ''ஏற்கெனவே சாஸ்திர சம்பிரதாயத்தை எல்லாம் ராம சாமி மதிக்க மாட்டான். இவன் பதவிக்கு வந்தா, கோயிலெல்லாம் என்ன கதிக்குள்ளாகப் போகுதோ?'' என ஆத்திகர்கள் பதறினர். ஆனால், அதே ஆத்திகர்கள் வாயடைத்து நிற்கும்விதமாக, கடனில் தவித்த கமிட்டியை மீட்டு, கோயில்களில் ஆறு கால பூஜைகள் நடத்தி, 45,000 ரூபாய் லாபத்துக்கு மாற்றி, தனது தனிப் பட்ட கொள்கைகளுக்கும் பொது நலச் செயல்பாட்டுக்கும் இடையி லான வித்தியாசத்தை உலகுக்குத் தெரியப்படுத்தினார் ராமசாமி.
இப்படியாக மக்கள் சேவை, மண்டி வியாபாரம் என ஈரோடு நகரத்தையே எண்ணமும் உடலு மாகச் சுற்றிச் சுழன்றவருக்கு, புதிதாக ஒரு பெரும் பதவி தேடி வந்தது. ஈரோடு நகராட்சி மன்றத் தலைவராக ராமசாமி பொறுப்பேற்றுக்கொண்டதும், நகரம் துரிதமாகப் புதுப்பொலிவு பெற ஆரம்பித்தது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஆக்கிர மிப்புக் கட்டடங்கள் இடிக்கப் பட்டன. பணக்கார வியாபாரிகள் சிலர் வயிற்றெரிச்சலில் புலம்ப, நகரத்து மக்கள் ராமசாமியின் புகழை வாயாரப் பாடியபடி சுதந் திரமாகச் சாலையைக் கடந்தனர். குடிநீர்க் குழாய்கள் இணைக்கப்பட்டு, வீடுகளுக்குள் முதன்முறையாகத் தண்ணீர் கொட்டத் தொடங் கியது.
இந்த மகிழ்ச்சியின் அலை பக்கத்து நகரான சேலத்தை எட்டியது. அப்போதைய சேலம் நகராட்சிக்குத் தலைவராக இருந்த காங்கிரஸ் தலைவர் ஒருவருக்குப் பயங்கர ஆச்சர்யம்! 'யார் இந்த ராமசாமி? சொல், செயல், தொண் டுள்ளம் என எல்லா விஷயங்களி லும் இப்படியரு நிகரற்ற தனித் தன்மையுடன் நின்று விளையாடு கிறாரே... ஆளை எப்படியாவது இழுத்து காங்கிரசுக்குள் போட்டால் காந்திஜி சந்தோஷப் படுவாரே!' என நினைத்தபடி தனது நண்பர் டாக்டர் வரத ராஜுலு நாயுடுவிடம் விசாரிக்க, அவரும் ராமசாமியின் ரசிகராக இருந்தார்.
அடுத்த நாளே, ஏதோ கோர்ட் விஷயமாகக் காரியம் பண்ணிக் கொண்டு இருவரும் ராமசாமியைச் சந்திக்க, ஈரோடு புறப்பட்டுச் சென்றனர்.
ராஜாஜி என்றும் ராஜகோபா லாச்சாரியார் என்றும் பிற்காலத் தில் மக்களால் அறியப்பட்ட அந்த சேலம் நகராட்சி மன்றத் தலைவர், தன் நண்பரோடு புறப் பட்ட அந்தப் பயணம், இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றின் பிரமாண்டமான மாற்றங்களை உள்ளடக்கியது என்பதை நிச்சயமாக அவர்களாலும் அப்போது ஊகித்திருக்க முடியாது!

நன்றி விகடன்
No comments:
Post a Comment