Sunday, April 6, 2008

சனிப் பிணம் தனிப் போகாது!

பூமி அன்னையின் நினைவுகளில் கிழமைகள் என்பதே கிடையாது.
நிலவின் நடமாட்டத்தை வைத்து மாதத்துக்கு முப்பது நாள் என்று பிரித்ததிலாவது அர்த்தம் இருக்கிறது. மாதத்தை நான்கு வாரங்களாகப் பிரித்ததற்கோ, வாரத்தை ஏழு நாட்களாகப் பிரித்ததற்கோ எந்த அர்த்தமும் இல்லை.
நம் வசதிக்காக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயர் கொடுத்தோம்; அவ்வளவுதான்! சனி என்ற வார்த்தை மீது இந்தக் கலாசாரத்தில் மனிதன் கொண்ட வெறுப்பின் காரணமாக, அந்த தினத்தில் நிகழும் மரணத்தைக் கூட மிரட்சியுடன் பார்க்கிறான். மற்றபடி, இதில் எந்த அனுபவ உண்மையும் இல்லை.
ஆன்மிகத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு தங்களைத் திரும்பிப் பார்க்கவைக்க சிலர் இப்படி எதையாவது உளறிக்கொண்டே இருப்-பார்கள். அப்படி உலவவிட்ட அபத்த வாக்கியங்களில் இதுவும் ஒன்று.
சந்தேகமிருந்தால், மற்ற தினங்களில் ஒரு பிணத்துக்கு மேல் வருவ-தில்லையா என்று சுடுகாட்டில் கேட்டுப் பாருங்கள்!
பாவம் சனி...

No comments: