Tuesday, April 22, 2008

நியூரான் கேள்விகள் - கடவுள் இருப்பின்

உங்களுடைய கடவுள்கள் எல்லாம் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம்...
நீ கருவாக உன் அம்மா வயிற்றில் இருக்கும் போதே நீ பிறந்து வெளியே வந்தவுடன் குடிப்பதற்காக உன் அம்மாவின் மார்பகங்களில் தாய்ப்பாலினைக் கொடுத்த உன் கடவுள்களுக்கு தெரியாதா உனக்கு எந்த எந்த நேரங்களில் எதை எதைக் கொடுக்க வேண்டுமென்று. பிறகு எதற்கு தினமும் இத்தனை வேண்டுதல்கள்? எனக்கு இதைக் கொடு அதைக் கொடுக்காதே; இது வேண்டும் அது வேண்டாம் என்று எதற்கு இத்தனை கட்டளைகளை கடவுள்களுக்கு இடவேண்டும்?
சுவாசம் செய்பவரெல்லாம் மனிதரல்ல;
சுயசிந்தனை செய்பவரே மனிதர்.

No comments: