Sunday, April 20, 2008

நியூரான் கேள்விகள் - நம்பிக்கை

அ)69க்கு முன்னால் நிலவு என்பது சிவனுடைய தலையில் இருக்கிறது; கங்கையின் பக்கத்திலே இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு இருந்தார்கள். 69க்கு பிறகு ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்று வந்த பிறகு நிலவு என்பது பாறைகளும், மலைகளும் நிறைந்தது என்பது நன்கு விளங்கிவிட்டது. அப்படியெனில் ஜடா முடியும் இல்லை, சிவனும் இல்லை என்றுதானே அர்த்தம்?

ஆ) வானத்தில் 300ஆயிரம் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்றாலோ, முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளார்கள் என்றாலோ எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே நம்புவான்; ஆனால் பக்கத்து கதவில் புதிதாக வண்ணப்பூச்சு அடித்திருக்கிறது என்றால் மட்டும் நம்பாமல் கையால் தொட்டு தொட்டு பார்ப்பான்...ஏன்?

சுவாசம் செய்பவரெல்லாம் மனிதரல்ல;
சுயசிந்தனை செய்பவரே மனிதர்.


No comments: