“எங்களோட சனங்களுக்கு சுதந்திரம் என்கிறது பிச்சை கேட்டு வாங்குவது என்ற எண்ணம்தான் இருக்கிறதேயொழிய பறித்து எடுப்பது என்ற அடிப்படை உண்மைகூட புரியவில்லை பார்த்தீர்களா ?
உலகில் சுதந்திரம் எங்கேயும் கொடுக்கப்படவில்லை. எடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை. FREEDOM NOT TO BE GIVEN;IT MUST BE TAKEN. என்பது கூடப் புரியவில்லை பார்த்தீர்களா ? சுதந்திரம் என்பது போராடிப் பெறுவது தானேயன்றி பிச்சைகேட்டுப் பெறுவது அல்ல என்பதை எம்மக்கள் அறியாததற்குக் காரணமே பிர்லா மாளிகையில் பால்குடித்துக் கொண்டு பராரி வேஷமிட்ட மகாத்மாக்கள்தான்.
சோவியத் மக்கள்ஜார் மன்னனிடம் மனுப்போட்டாஅடைந்தார்கள் அவர்களதுஅமைதி பூங்காவை…?
வியத்நாம் மக்கள் வீரஞ்செறிந்தபோரின்றி விரட்டியிருக்க முடியுமாஅமெரிக்க ரேம்போக்களை ?
உலகில் எங்கும் - எவராலும் -கொடுக்கப்படவில்லை - எடுக்கப்பட்டதுஎன்பது தானே வரலாறு (இந்தியாவின் நிலைமைதான் பாவம்).
No comments:
Post a Comment