Thursday, October 30, 2008

கடல் தண்ணீரை ஏன் உப்பாக உங்கள் கடவுள்கள் படைத்திருக்க வேண்டும்?

சக்கரம், நெருப்பு, மொழி, ஆடைகள், விதவிதமான உணவப்பொருட்கள், எழுத்து, தொலைபேசி, மின்சாரம், மின்விளக்கு, கேமரா, மோட்டார் வாகனங்கள், தொலைகாட்சிபெட்டி, பெட்ரோல், தங்கம், நிலக்கரி, செயற்கைகோள்கள், கார், மோட்டார் பைக், கப்பல், விமானம், கம்ப்யூட்டர், கிரைண்டர், செல்போன் என இப்படிப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை பூமியில் கண்டெடுத்து மனித வாழ்வினை ரசிக்க உதவியாக இருக்கட்டும் என்று மனிதனுக்கு மூளையைக் கொடுத்த உங்கள் கடவுள்கள் ஏன் இந்த பூமியின் நல்ல தண்ணீரின் அளவை மட்டும் வெறுமனே மூன்று சதவீதமாக (பூமியின் தண்ணீர் பரப்பு மூன்றில் இரண்டு மடங்கு ஆகும். அதில் உள்ள நல்ல தண்ணீரின் அளவே மூன்று சதவீதமாகும்) உருவாக்கி இருப்பதற்கு பிண்ணனி என்னவாக இருக்கும் என்று நானும் ரொம்பவே யோசித்துப்பார்த்து விட்டேன் . என் அறிவிற்கு உப்பின் பயன்பாட்டைத்தவிர வேறு எதுவும் கிட்டவில்லை . உங்கள் மூளையிடமும் கேட்டு பாருங்கள்?

No comments: