என்னவோ கடவுள்னு ஒருவர் இருந்தால், அவர் ஆத்தீகர்களுக்குத்தான் நன்றியோட இருப்பார்னு நினைப்பது தவறு! கடவுள் என்பவர் இருந்தால், சாதாரண ஜால்ராவுக்கும், முகஸ்துதிக்கும் மயங்கும் மனிதனைப்போல் உணர்வு உள்ளவர்/ள் போல் நினைத்து மடமையில் வாழ்கிறார்கள் சில ஆத்தீகர்கள்!நாத்தீகர்களுக்கு கடவுள் என்றுமே எதிரி அல்ல. கடவுள் இல்லாமல் அவர்களால் வாழமுடியுது. அவர்களுக்கு கடவுளின் உதவி தேவைப்பட வில்லை! நாத்தீகர்களைப் பொறுத்தமட்டில் கடவுள் கடவுள்னு சொல்லி ஊரை ஏமாற்றும் சில ஆத்தீகர்களைத்தான் அவர்களுக்கு பிடிக்காது! கடவுள் என்பவர் இருந்தால் அவர் ஒரு போதும் நாத்தீகர்களுக்கு எதிரி அல்ல.இப்போ எல்லோருக்கும் உதவி செய்ய ஒருவர் இருக்கார். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணனும், நம்ம பிரச்சினையை நாமே போராடி வெற்றியடைவோமே என்கிற தன்னம்பிக்கையில் அவரிடம் போகவில்லை, அவர் உதவியை நாடவில்லை என்றால், அவர் கோவிச்சுக்குவாரா? அப்படி கோபித்துக்கொண்டால் அவரும் சாதாரண மனிதர்தான். இல்லையா?கடவுளுக்கு நாத்தீர்ககளைத்தான் ரொம்ப பிடிக்கும், பிடிக்கனும். தான் இல்லாமலே இவர்களால் தன்னம்பிக்கையுடன் போராடி வாழமுடியுது என்பதை கடவுளே பாராட்டுவார். என் பேரைச்சொல்லிச் சொல்லி ஊரை ஏமாற்றாமல்/ தங்களையே ஏமாற்றாமலும் இருக்காங்கனு ரொம்ப சந்தோஷப்படுவார்! அதைவிடுத்து, தன்னை வழிபடுவனைத்தான் எனக்கு பிடிக்கும் என்று கடவுள் நினைத்தால், அந்தக் கடவுளுக்கு கடவுளாக இருக்கும் தகுதி இல்லாமல்போகிறது!பொதுவாக மனிதனாகப்பிறந்தவர்கள், ஏமாற்றாமல், திருடாமல், நம்பிக்கை துரோகம் பண்ணாமல், மேலும் எல்லோரையும் தன்னைப்போல் நினைப்பது, மனிதாபிமானத் தோட வாழ்வது போன்ற நற்பண்புடன் வாழ்ந்தால், நாத்தீகராக இருந்தாலும் அவர்களும் உயர்ந்த மனிதர்கள்தாம் என்பதை தன் சுயநலத்திற்காக, இறைவழிபாடு மற்றும் கடவுளை திருப்திப்படுத்த முயலும் ஆத்தீகர்கள் மனதில் கொள்ள வேண்டும்.நாத்தீகர்கள், கடவுள் இல்லை என்று நம்புவது ஒண்ணும் பெரிய குற்றமல்ல! நம்ப முடியாததால் நம்புவதில்லை! அவர்களுக்கு நடிக்கத்தெரியவில்லை! தன் மனதில் தோன்றுவதை உண்மையாக சொல்கிறார்கள்! அவ்வளவுதான்!நற்குணங்களுடன், மனிதாபிமானத்துடன் இருந்து தன்னால் உணரமுடியாத கடவுளை வணங்கவோ வழிபடவோ நாத்தீகர்கள் செய்யவில்லையென்றால் அது ஒண்ணும் தவறல்ல! அது எந்த வகையிலும் அவர்களை குறைக்காது என்பதை ஆத்தீகர்கள் உணர்வது நல்லது!
No comments:
Post a Comment