அ) இரத்தம் சிந்தி உழைத்து உருக்குலைந்து அல்லற்படும் அழியும் உடலுக்குள் அழியாத, ‘ஆத்மா’ எதற்காகப் புகவேண்டும்? உடலழிந்த பின் அகல வேண்டும் என அறிந்தும், எதற்காக ‘ஆத்மா’, என்னைத்தேடி அடையவேண்டும். இவ்வுடல் இன்பத்திலே துன்பத்தையும் கலந்து பருகியது. ‘ஆத்மா’ உடல் செய்த செயல்களுக்கெல்லாம் உறுதுணையாக இருந்ததா? அப்படி என் செயல்களுக் கெல்லாம் துணையாக இருந்திருப்பின், எனக்கு முடிவு கிட்டியக்கால் என்னைவிட்டு ஏன் அகல வேண்டும்? கோழைத்தனம் எனது உணவிலே வளர்ந்து, என்னைவிட்டு வேறு கூட்டுக்குள் புகுவதா? (இழிவு - இவ்வுலகிற்கு அடுக்காத நன்றியறிவற்ற தன்மை)
ஆ) குழந்தையாய் இருக்கும் போது என்னுள் இருக்கும் ஆத்மா நான் வளரும் போது அதுவும் வளருமா?
இ) மூளை சரியில்லாமல் பைத்தியமாய்ச் சுற்றிக்கொண்டு இருப்பவரின் ஆத்மா என்ன செய்யும்?
சுவாசம் செய்பவரெல்லாம் மனிதரல்ல;
சுயசிந்தனை செய்பவரே மனிதர்.
No comments:
Post a Comment